(CLICK HERE)
eBooks can be had from:http://www.sangapalagai.in/author/N-Natarajan/136
---------------------------------------------------------------------------------------------------------------------
Institution of knowledge
-------------------------------------------------------------------------------------
மனிதர்களான நாம் வாழும் பாதைகள் இரண்டு.
முதலாவது நம்பிக்கைப் பாதை
இரண்டாவது அறிவுப் பாதை.
அறிவு வளர வளர நம்பிக்கைப் பாதையிலுருந்து விலகி அறிவுப்பாதையில் செல்கிறோம்.,
---------------------------------------------------------------------------------------------------------------------------------முதலாவது நம்பிக்கைப் பாதை
இரண்டாவது அறிவுப் பாதை.
அறிவு வளர வளர நம்பிக்கைப் பாதையிலுருந்து விலகி அறிவுப்பாதையில் செல்கிறோம்.,
கல்விக்கூடங்கள்
கல்விக்கோவில்களாக மாறிவருகிறது. \
எப்படி?
எப்படி?
அறிவும் நம்பிக்கையும் எதிரும் புதிருமான இரண்டு வெவ்வேறு வாழ்க்கைப்பாதைகள்.
இரண்டு பாதையிலும் மாறி மாறி பயணம் செய்கிறோம்.
கோவிலகள் நம்பிக்கையை மாத்திரமே முன்வைத்து வாழும் வழிகள்.
நம்பிக்கை அறிவிலாமல் வாழுவோருக்கு ஒரு வசதி .
கல்வியோ அறிவு வழிப் பயணத்திற்கு ஒரு மும்முறமான பயிற்சி.
இங்கே நம்பிக்கைகளுக்கு அதிக இடமில்லை.
இதனால் , ஏழைகள் பரம ஏழைகளாக மாறி வருகிறார்கள்.
சமீபத்தில் வெளியான செய்தி :
"போணி' ஆகாத தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகள்: சர்வேயில் வெட்ட வெளிச்சம்
திறமையான இன்ஜினியரிங் பட்டதாரிகள் மற்றும் அவர்களுக்கான வேலை வாய்ப்பு குறித்து, 16 மாநிலங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், தமிழக இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு, கடைசி இடம் கிடைத்துள்ளது. டில்லி, பீகார், உத்தரகாண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், திறமை மற்றும் ஆங்கில பேச்சுத்திறன் உள்ளவர்களாக இருப்பதால், இவர்களுக்கே அதிகளவில் உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என்றும், ஆய்வில் தெரிய வந்துள்ளது.
22 மாநிலங்களில் ஆய்வு: தனியார் வேலை வாய்ப்புகள் குறித்து ஆய்வு நடத்தும், "ஆஸ்பையரிங் மைன்ட்ஸ்' என்ற நிறுவனம், "தேசிய அளவிலான வேலை வாய்ப்பு அறிக்கை - 2011'யை, சமீபத்தில் வெளியிட்டது. வட மண்டலத்தில், டில்லி, அரியானா, இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட 9 மாநிலங்கள்; கிழக்கு மண்டலத்தில் அசாம், சத்திஸ்கர், மேகாலயா, ஒடிசா, திரிபுரா, மேற்கு வங்கம்; மேற்கு மண்டலத்தில் குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், கோவா. தென் மண்டலத்தில் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்கள் என, மொத்தம், 22 மாநிலங்கள், 250 பொறியியல் கல்லூரிகள், 2011ல் படிப்பை முடித்த, 55 ஆயிரம் பொறியியல் பட்டதாரிகள் ஆகியோரைக் கொண்டு, மிகப்பெரிய ஆய்வை இந்நிறுவனம் நடத்தியது.
17 சதவீத பேருக்கே வேலை: நாடு முழுவதும் உள்ள, 3,000 பொறியியல் கல்லூரிகள், ஆண்டுக்கு, ஐந்து லட்சம் பொறியியல் பட்டதாரிகளை உருவாக்குகின்றன. ஆனால், இவர்கள் அனைவரிடமும், நிறுவனங்கள் எதிர்பார்க்கும் கல்வித்தரமோ, திறமையோ இல்லை என்பது தான் வேதனை! இவர்களில், வெறும், 17.45 சதவீதம் பேருக்கு மட்டுமே, ஐ.டி., தொழில் துறையில், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன. இந்த வகையான பட்டதாரிகளும், 70 சதவீதம் பேர், கேம்பஸ் இன்டர்வியூ மூலமே தேர்வு செய்யப் பட்டு விடுகின்றனர்.
சாதிக்கும் பீகார்: ஐ.டி., துறை சார்ந்த வேலை வாய்ப்புகளில், முதல் இடத்தை டில்லி பிடித்துள்ளது. கல்வி, வேலை வாய்ப்பு, ஒட்டுமொத்த வளர்ச்சி என, எல்லாவற்றிலும் மிகவும் பின் தங்கிய மாநிலமாக பேசப்படும் பீகார் மற்றும் ஜார்கண்ட் மாநிலம், இரண்டாம் இடம் வகிக்கின்றன.
கடைசியில் தமிழகம்: தமிழகத்தை மாற்றி, மாற்றி ஆண்டு வரும் தி.மு.க.,வும் - அ.தி.மு.க.,வும், "எல்லா வகையிலும், தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றிக் காட்டுவதே நோக்கம்' என, சபதம் போடுகின்றனரே தவிர, எதையும் சாதித்துக் காட்டவில்லை என்பதை, ஐ.டி., வேலை வாய்ப்புகளில், தமிழகத்திற்கு கடைசி இடம் உள்ளது மூலம் தெரிந்து கொள்ளலாம். தெற்கு பிராந்தியத்தில், கர்நாடகமும், கேரளாவும் தான், முன்னணி மாநிலங்களாக விளங்குகின்றன. பி.பி.ஓ., வேலை வாய்ப்புகளை எடுத்துக் கொண்டாலும், தமிழகத்திற்குத் தான் கடைசி இடம்! தமிழக பொறியியல் பட்டதாரிகளில், வெறும், 10 சதவீதம் பேருக்கு மட்டுமே, வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன.
கல்லூரிகளின் தரம்: வேலை வாய்ப்பில் முன்னணி இடங்களை வகிக்கும் மாநிலங்களில், பீகார், உத்தரகாண்ட், சத்திஸ்கர் உள்ளிட்ட பல மாநிலங்களில், குறைந்த எண்ணிக்கையில் கல்லூரிகள் இருக்கின்றன. எனினும், இவை தரமான கல்லூரிகளாக விளங்குகின்றன. இங்கு படிக்கும் மாணவர்கள், ஆங்கில பேச்சாற்றலுடன், பிரச்னைக்கு தீர்வு காணும் ஆற்றல் உடையவர்களாகவும், படைப்புத்திறன் மிக்கவர்களாகவும் உள்ளனர். இதன் காரணமாகவே, இம்மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்புகள் கிடைக்கின்றன என, ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. ஆனால், தமிழகத்தில் புற்றீசல் போல், 600 பொறியியல் கல்லூரிகள் முளைத்து விட்டன. கல்விக்கு சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம், பொறியியல் கல்லூரிகளை துவக்கினர். ஏ.ஐ.சி.டி.இ.,யில் இருந்து வருபவர்களையும், தமிழக அமைச்சர் மற்றும் அதிகாரிகளை, "எப்படி' கவனிக்க வேண்டும் என்ற வித்தைகளை தெரிந்து, அங்கீகாரம் பெற்று கல்லூரிகளை துவக்கி, கல்லா கட்டி வருகின்றனர். ஆனால், தரமான கல்வியைப் பற்றி, ஒருவரும் சிந்திப்பதில்லை.
- நமது சிறப்பு நிருபர் -
கல்விக்கோவில்கள்
கல்விக்கூடங்களை கோவில்கள் என்று அழைப்பது மிகவும் பொருத்தம். ஏன் தெரியுமா? இரண்டுக்குமே ஓற்றுமைகள் ஏராளமா இருக்குல்ல,
கோவில்: தெரியாத எதிகாலம், துய்ரங்கள் கூடிய கடந்தகாலம், இதுக்கு நடுவுலே, ஒரு வளமான் நிகழ்காலம் அவசியம். இதுக்கு மூளய கசக்காம் உடம்பு நோவாம, சுலபமாக பெறணும். அதுக்கு வேண்டி, இறைவனின் அருளைப் பெறணும்.
அது சும்மாவா? தேங்காய், பூ, பழம், அர்சனைச் சீட்டு சகிதம் கோவிலககுக்கு போகிறொம். பலதரப்பட்ட பூசாரிகள், அர்ச்சகர்களும், நமது வேண்டுகோளை, பிரார்த்தனைகளை கடவுளுக்கு எடுத்துச் சொல்ல காத்திருக்காங்க. இவங்க ஃபீஸ், ஒரு சில நாணயங்கள் போதும்.
கல்விக்கோவில்: அதே போலவே தங்கள் மக்கட் செல்வங்களுக்கு வளமான எதிர்காலம் அமையவேண்டி, மாணவர்களை பெற்றோர் கல்விக்கோவிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள்.
இந்தக் கோவில்லேயும் பூசாரி, அர்ச்சகர் பிரத்யோக உடுப்பு மரியாதை எல்லாமே உண்டு..
ஆனால் கல்விக் கோவிலில் செலவு மிக அதிகம்தான். ஏதோ இருப்பதை விற்று, கடன் வாங்கி, வயிற்றைக் கட்டி வாயைக் கட்டி மாத்ச சீட்டு போட்டு, இல்லையின்னா கல்விக் கடன் எடுத்து சீட்டு வாங்கணும், அதுவும் போகட்டும். .
கோவில்:அர்சகருக்கு கடவுளையும் பிரார்த்தனகளையும் எடுத்துச் சொல்ல பயிற்சிகள் உண்டு. அவர் புரியாத மொழியில் ஏதொதோ சொல்கிறார். நமக்கு அவர் சொல்லும் பிரார்த்த்னைகளுக்கு பொருள் தெரியாது. ஆனால் நமக்கோ பிரார்த்தனை செய்யும் பயிற்சி இல்லை. அவரை நம்புகிறோம்.
இவர் சொல்லிய் மந்திர உச்சாடனைகளில் மனம் மகிழ்ந்து நமது வேண்டுகோளை கடவுள் நிரைவேற்றுவார் என்று ஒரு நம்பிக்கை.
கல்விக்கோவில்: அதேபோல கல்விக்கூடங்களுக்கு நாம் பிள்ளைகளை பெரும் செலவில் அனுப்புவதும் ஒரு நம்பிக்கைதான். இங்கே படித்து அறிவு அடைந்து, பட்டங்கள் பெற்று, பெரிய வருமானம் வரும் வேலை கிடைத்து அமோகமாக வாழ்வார்கள் என்பது தான் அடிப்படை நம்பிக்கை..
கோவில்: பக்தனின் பிரச்சனைகள் பூசாரி அல்லது அர்ச்சகருக்கு ஒரு வயிற்றுப்பிழைப்புக்கு பயனாகிறது..பக்தனின் சில்லரைகள் கை மாறுகிறது. ஆனால், பக்தரின் வேண்டுகோள் நிரைவேறியதா இல்லையா என்பதைப் பற்றிய கவலை பூசாரிக்கில்லை. அவரால் முடிந்த அளவு, அவருக்கு தெரிந்த எல்லாமே கடவுளிடம் சொல்வார்.
ஆனால், பூசாரியின் சிபாரிசுக்கு. கடவுள் செவிசாய்ப்பாரா? செவிசாய்க்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். செவிசாய்ப்பார் என்பது பரவலான நம்பிக்கை.
கல்விக்கோவில்: வளமான எதிர்காலத்தைத் தேடி கல்விக் கோவிலின் காலை வைக்கிறோம். ஷூ, யுனிபாரம், ஆட்டோ, பஸ், டொனேஷன், வருடம் முழுவதும் எதோதோ செலவுகள். மாதாந்திர செலவுகள், வருடாந்திர செலவுகள், செமஸ்டர் செலவுகள் புத்தகங்கள் வங்கக செலவுகள் கல்விக்கொடை கட்டிடத்திற்கு தானம் என்று ஏராளாமான பணத்தை ஒரு நம்ப்பிக்கையுடன் செலவழிக்கிறோம். ஆசிரிய்ரும் (கருவரையில் பூசாரி மந்திரம் சொல்வது போல மிகுந்த ஆரவத்துடன்) மாணவருக்கு முன்னால் பாடங்கள் சொல்லி சிலபஸ்ஸை முடிக்கிறார். இதெற்க்கெல்லாம், பலன் கிடைக்குமா? இந்த் கல்வியினால் பிழைப்பதற்கு வேலை கிடைக்குமா? வாழ்வதற்கு அறிவு வளருமா? நம் சந்ததிகளின் வருங்காலத்தை வளமாக்குமா?
கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்., வளமாக்கலாம் வளமாக்காமலும் போகலாம். ஆசிரியர் தன் கடமையை செய்வார்: பல பஸ்களை தவற்விட்டாலும் சிலபஸ்ஸை தவறாமல் முடிப்பதில் கண்ணும் கருத்துமாயிருப்பார்.
பல வித தேர்வுகள் நடத்துவார். பரிட்சைக்கு முன்னால் . முக்கியமான கேள்விகளைத் தருவார், அதோடு பதிலையும் தருவார். பட்டி அடிக்கலாம் அல்லது பிட்டடிக்கலாம். இதை எல்லாம் வாத்தியார் சரியாக செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையில் கல்வி நிர்வாகி வாழ்கிறார்.
ஆனால் சிலபஸ்ஸை முடித்தவுடன் மாணவர்களுக்கு அதற்கான அறிவு வருமா? வரலாம். இல்லை வராமலும் இருக்கலாம். எல்லாமே, வரும் என்பது ஒரு நம்பிக்கைதான் இல்லையா?
மாணவர் பங்கு
மேலே கண்ட சிரமத்தை பெற்றோர் சுமப்பது யாருக்காக. புத்திர செல்வங்ஞ்க்களுக்காக. அவர்களாய் தங்களைவிட சிறப்புடன் வாழவைக்கத்தானே. கல்வித்திட்டத்தின் கதா நாய்கனே நான்தானே என்கிறார் மாணவர். பெற்றொரின் கனவை நினைவாக்க கல்வித்திட்டத்தில் கால் வைக்கிறார். வகுப்பறையில் ஆசிரியர் நடத்தும் பாடங்களை முடிந்தவரை கேட்கிறார். புரிந்தவரை தலையாட்டுகிறார்.
சில மாணவர்களுக்கு அதிகமாகவே புரிகிறது. அதிக மாணவர்களுக்கு கொஞ்ச்ம்தான் புரிகிறது. வேறு பலருக்கு கொஞமும் தலையிலே ஏறல்லே. பரிட்சை வருது. பத்து நாள் முன்பாகவே மனப்பாடம் செய்கிறார், சினிமா பாட்டு வசனம் எல்லாம் பல வருஷம் ஆனாலும் மனசுலே நிக்கிதுல்லே
இந்த பாடம், சனியன் மட்டும், கொஞ்ச நேரம் கூட நிக்க மாட்டேங்குது. பிட் அடிச்சானும் பாஸாயிடனும்..அப்படி நினைக்கிறார் மாணவர்.
எல்லா மாணவர்களும், பரிட்சைக்கு போரப்ப, வழிலே பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போட்டு, தேங்கா ஒடக்கிறதா பிராமிஸ் பண்ணிட்டு (தேங்காயும் நாம தானே திங்கப்போறோம், பரவாயில்லே), போராரு.
படிச்சதை, இல்லை படிச்சதிலே சீரணிக்காத எல்லாத்தையும் காகித்துலே வாயிலெ எடுத்துட்டா, மகனே, அடுத்த செமிஸ்டர் வரிக்கும் ஜாலிதான்.
பரிட்சைக்கு முன்னாடி பத்தே நாள் திரும்பவும் புரியாத பாடத்தை எல்லாம் தலையிலே இல்லே பிட்டிலே தினிக்கணும். அதுவரே நிம்மதி.
சரி இப்போ ரிசல்டுக்கு வருவோம். இப்படிப் பட்ட படிப்பில் மார்க் எடுக்க முடியுமா? பிள்ளையார், தான் திங்காத தேங்காய்க்கு, எததனை மார்க் போடவைப்பார்? யாராலேயும் சரியா சொல்ல முடிய்ல்லெ. .. மார்க் போடுவார் என்கிற நம்பிக்கையிலேதானே கல்விக் கூடத்து பக்கத்திலே புள்ளையார் சிலை வச்சிருக்கானுக. இல்லைனா, அங்கேயும் தலைவர் சிலையில்லே வச்சிருப்பானுக?
அப்ப, அதுவும் ஒரு நம்பிக்கைதான்.
சரி பரிட்சைக்கு பத்து நாள் முன்னாலே முழுங்கிட்டு, பரிட்சை அன்னிக்கி வாயிலெடுதுட்டா, வேலை தேடரப்போ பிரச்சனை வராதா? வர்ரது என்பதும் ஒரு நம்பிக்கைதான். அன்னிக்குப் பார்க்கலாம்.
இன்னைக்கி அப்பா அம்மா கேட்ட பணம் தராங்க. மற்ற பசங்களோட ஜாலியா இருக்கலாம். போதாத குறைக்கு பஸ்லே புட் போர்ட்லே நின்னுகிட்டு பொண்ணுங்களே கவர் பண்ணலாம். ஓசி மோட்டர் பைக்கிலே எட்டு போட்டு அஞ்ங்களை இம்ப்ரெஸ் பண்ணலாம். காதலிக்கலாம். இதெல்லாம் எப்போ அனுபவிக்கிறது மச்சீ. அனுபவி ராஜா அனுபவி.
அப்பா, அம்மா சொல்றாங்க: அடப் பாவி மக்களே, உங்களை சீரும் சிறப்புமா பாக்க வய்தத் கட்டி வாயக் கட்டி, வட்டி கட்டி அவங்களுக்கே கட்டி வந்து அவதிப்படும் நாங்கள் கனவு கண்டாகே,. நீங்க என்னவோ, யாரையோ வாயும்-வயிறுமா நிப்பாட்ற புரோகிராமுல்லே போடரீங்க.
அப்ப, பெற்றொர்களின் கனவு என்ன ஆவுரது?
ஒரு வாலிபர் சொல்கிறார்,அவங்க கோவிலுக்கு போவாங்க, சாமிக்கு நேந்து ப்பாங்க, எல்லாம் பலிக்கும் என்கிற நம்பிக்கைதான்.
நம்பிக்கேலா தான் உலகம் இயங்குதுன்ன எங்க அப்பாரு அப்பப்ப சொல்வாறு.
பெற்றொருக்கும் கல்வித் திட்டத்தில் மிக முக்கியமான பங்கு உண்டு.
பள்ளிகூடத்தில் படித்தால் மட்டும் போறாது. டியூஷன் வைக்கணும், இண்டெர்னெட் கனேக்ஷன் வாங்கிக் கொடுக்கணும், இதற்க்கெல்லாம் பணம் ஏற்பாடு செய்யணும். பள்ளிகளில் மாணவர்களுக்கு மட்டுமில்லை தாய் தந்தைக்கும சேத்துத்தான் ஹோம் ஒர்க் தராங்க/.
அதனால்தான், எல் கே ஜி முதல் பள்ளியில் சேர்க்க தாய் தந்தை இருவரும் நேர்காணலுக்கு வரணும். இல்லையா. அதனால பெற்றவங்க பங்கு கல்வித்திட்டத்கு உள்ளேயயே நிறைய இருக்கு.
ரொம்ப நல்லா இருக்கு !
இதெல்லாமல் Engineering entrance, Medical entrance, IAS, IIM, IIT இவற்றுக்கு வேறே தனி பயிற்சிக்கு வேறே .செலவு பண்ணணும்
ஆமா, இத்தன பாடுபட்டு, செலவு பண்ணி கல்வித்திட்டத்தை சுமுகமாக முடித்து வெளியே வந்தா, வேலை கிடைக்குமா, கிடைக்காதா?
இதென்னையா ரோதனையயா போச்சு, இதெல்லாம் ஒரு நம்பிக்கைதான். நம்பிக்கை இல்லாமலா ஏழை பாழை படிச்சவன் படிக்காதவன் எல்லோரும் பிள்ளைகளை கல்வித்திட்டத்துலே சேக்கராங்க?
மலையாளத்துலே ஒரு பழமொழி சொல்லுவாங்க: நாடு ஓடும்போழ், நடுக்கே ஓடனுமுன்னு.
அதாவது நாட்டூலே நம்மை சுத்தி இருகிரவங்க ஓடரப்போ நாமும் அதுக்கு நடுவுலே சேர்ந்து ஓடிரணும்,. தனியா நிக்கப்படாது. புரியயூதா?
ஆனா ஓடரவங்க எல்லாரும் ஒரு அதல பாதாளத்துலே விழுந்துட்டா என்ன செய்யறது ? நாமும் விளுந்துருவோம்.இல்லையா? விளமாட்டாங்க, என்கிறதும் ஒரு நம்பிக்கைதான்.
பிள்ளைகளின் எதிர்காலம்
நம்பிக்கை எல்லாம் சரி, கல்வித் திட்டத்தில் இவ்வளவு சிரமப்பட்டு செலவழித்து வெளிவரும் பிள்ளைகள் எல்லோருமே ஒரு கல்விக்குறிய வேலை கிடைத்து வளமாக வாழ்வார்களா? அவ்வளவு வேணாம், வயிற்றைக் கழுவ, கல்விக்கடனை வட்டியுடன் திருப்ப, பெற்றொர் தான் அடைந்த கடனை அடைக்க ஓகோன்னு இல்லைனாலும் ஓக்கேங்கிற மாதிரி ஒரு வேலை கிடைக்குமா?
கிடைக்கலாம் இல்லைனா கிடைக்காமலும் போகலாம். கிடைக்கும் என்கிற நம்பிக்கைல தான் எல்லோரும் கல்விக்கூடம் போறாங்க. நம்பிக்கைதான் ஐயா. ....
போதும் நிருத்துமைய்யா.
இப்படியும் ஒரு உண்மை:
அர்ச்சகரே இல்லாத கோவில்களில் பிரார்த்தனைகள் நிரைவேறுவது போல, ஆசிரியர்கள் குறைந்த, கூரை இல்லாத பள்ளிகளில் படித்து உய்ர்கல்வியை, மற்றவரோடு, எட்டிபிடித்த மாணவர்களும் உண்டு.
எல்லா செலவுகளையும் செய்து உயர்கல்வி பெற இயலாத மாணர்களும் பலருண்டு.
உயர் கல்வி பெற்றும் வேலையில்லாத வெட்டிகளாய் திரியும் பட்டதாரிகளுக்கும் குறைவில்லை. குறைந்த கல்வி பெற்று
உயர் பத்வி வகிப்போருக்கும் குறைவில்லையே !
இது எதைக்காட்டுகிறது - கல்வித்திட்டத்திற்கும் உண்மைக்கும் உள்ள, இடைவெளியை.
கல்விக்கும் - வாழ்வில் அடையும் வெற்றிகளுக்கும் கல்வித்திட்டங்கள் மட்டுமே (முழுவதாக) காரணமில்லை. ஆனால் கல்வித் திட்டங்களின் குறைகளையும் மீறி வெற்றி அடையும் சிலருக்கு நாம் நமது சிரம் தாழ்த்துவோம்.
பள்ளித்திட்டததிலில் இடம் பெற்றும், வாழ்வில் பலர் வெற்றி காணத்தன் காரணம்: பெற்றொர்களின் வேண்டுதல்களில் குறைவா? மாணவர்களின் ஊழ்விலையா?
சாலமன் பாப்பையா, ராஜா எல்லோரையும் கூட்டி சண் டிவிலே பட்டி மன்றம் கூட்டிருவோமா?
இவை எல்லாமே மனதை தேற்றிக்கொள்ள, எல்லாமே வேஸ்டா போச்சுன்னு பைல குளோஸ் பண்ண மட்டுமே உதவும் ஆனால் வெற்றிக்கு உதவாது.
கல்வித்திட்டத்தில் என்ன கோளாறு:
கோளாறு எதும் இல்லை என்று வெகு தீவிரமாக மறுப்பவர்கள் பெரும்பாலும் கல்வித்திட்டத்தில் உள்ளவர்கள்தான். அவர்கள் சொல்லுவார்கள்.
- ஐய்யா,நமது கல்வித் திட்டம் மிக தொன்மையானது.
- நூற்றாண்டுகளாக பழமையானது.தொன்று தொட்டு இதே திட்டம்தான் இயங்கி வருகிறது.
(மாற்றுவதற்கு இன்னுமா நேரம் கிடைக்கவில்லை??)
- இந்த கல்வித்திட்டத்துலே அசைக்க முடியாத வலு உள்ளது.
( ஒரு இத்து இறுகிப்போனதுக்கு இப்படி ஒரு பேரா?)
வாசகர்களே, இந்த திட்டத்தைத தூக்கி எறிய்
இந்த வாக்கு மூலம் போதாதா?
இதில் என்ன கோளாறு என்று இப்போது அலசுவோம்.
- மாணவர்களின் தோல்விகளுக்கு தனிப்பட்ட மனிதர்கள் யாரையுமே குறை சொல்லிப் பயனில்லை.அறிவை அடையும் வழிகள் நம்ம கல்வித் திட்டங்களில் இல்லை. என்பதே உண்மை.
- அறிவை அடைய வழிதேடும் முன் அறிவென்றால் என்ன? அது எப்படிப்பட்டது? என்றெல்லாம் அலசுவோம்.
- இந்தப் பிரச்சனையைத் தீர்க்க எளிய வழிகளை வகுப்போம்.
மாணவர்களின் பிரச்சனைகள்
ஒரு வகுப்பறையில் ஒரு நிகழ்வு.: ஒரு ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்துகிறார், முன் பெஞ்சில் சிலர் ஆசிரியர் தலையாட்டும் போதெல்லாம், அதே போல, தன் தலையையும் ஆட்டுகிறார்கள். ஆசிரியருக்கு நிமமதி "இவர்கள் கவனித்து வருகிறார்கள்"..
வேறு சில தலைகள் வெவ்வேறு விதமாக ஆடுகின்றன . ஆசிரியருக்கு புரிந்துவிட்டது, இவர்களது தூக்கத்தில், தன்னிச்சையாக தலைகள் ஆடுகிறது எனபது.
வேறு ஒரு மாணவன் மாத்திரம் மோட்டு வளாயைப பர்ரத்தவாறு இருக்கிறான். ஆகா, நாம் நடத்திய பாடத்தை சிந்திக்கிறான் போலும். இவன் தான் சிறந்த மாணவன் என்று மகிழ்கிறார்.. அந்த மாணவனைப பார்த்துக் கேட்கிறார், "நான் சொன்னதெல்லாம் தலையில் நுழைந்ததா" என்று.
ஒரு எலி, இலவச மதிய உணவு நேரம் எப்போது வரும் என்று பசியோடு, நிம்மதி இல்லாமல் இங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தது. கடைசியாக வகுப்பு அறையின் சுவற்றில் இருந்த ஒரு பொந்தில் நுழைய்ப் பார்த்தது. உண்மையில், பையன் கவனித்து வந்தது அந்தப் பொல்லாத எலியை.
தன் காதில், நுழைய என்ற சப்தம் கேட்ட உடன், தன சுய நினைவுக்கு வந்தான், உடனே எழுந்து பதில் சொன்னான். ஐய்யா, கிட்டத்தட்ட நுழைந்து விட்டது. வால் மட்டும்தான் பாக்கி என்றான்.
எலி தன் வளைக்குள் நுழைவதை எல்லோரும் காணலாம், தெரிந்து கொள்ளலாம் படிக்கும் பாடத்தை மண்டையில் நுழையவைப்பது எப்படி என்று தெரிந்து கொள்ள யாரும் முயற்சி செய்யவில்லை.
அதை இப்போது விளக்கப் போகிறேன். இதற்குப் பிறகாவது கல்வித் திட்டங்களில் மாற்றங்கள் வருமா?
எல்லோரும் நம்பிக்கை வைத்திருப்பது போலும் நானும் நம்புகிறேன்.
செய்யப்படும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு,
எல்லோருமே சொல்கிறார்களே, உலகமே நம்பிக்கையின் அடிப்படையில்தானே இயங்குகிறது.
கல்வித் திட்டத்தில்
மக்கள் எதிர்பார்ப்பது என்ன?
,
பெரும்பாலான மக்கள் எதிர் பார்ப்பது "வெள்ளைக் காலர் உத்தியோகம் கிடைத்து வள்மா வாழ்ணும்"
நியாயமாக எதிர்பார்க்க வேண்டியது?:
- அறிவை அடையும் திறனைப் பெறுவது,
(௧) துயரம் ஓடிப்போகும்,
(௨) ஏழ்மை - வறுமை ஓடிப்போகும்
(௩)வளம் தானால் வந்து சேரும்.
கல்வி என்றால் என்ன?
- அறிவை வேகமாக அடையத் தேவையான எண்ணும் எழுத்தும் முறையாக தரப்படும் கட்டம் ஆரம்பக்கல்வி.
- வாழ்க்கைக்கு தேவையான இதர அறிவின் பரிமாணங்களின் அடிப்படைகளை அறிமுகப்படுத்துவது, அடுத்த் கட்டம்.
- இதன் பிறகு மாணவர்களைத தானே அறிவை அடையும் வழிகளையும் பயிற்சிகளையும் தரமவேணடிய்து மூன்றாவது கட்டம்.
- உயர் நிலைப் பள்ளிகளில். (இங்கிருந்து தான் நமது பள்ளித்திட்டம் தடம் புரளுகிறது.
- உய்ர் கல்வியில் குறிக்கோள், மேலே குறிப்பிட்ட அடிப்படை அறிவின் பட்டியலில் குறிப்பிட்ட ஒரு இலக்கைத் தேர்ந்தெடுத்து அதின் ஆழமும் ஆகலமும் கண்டு அதில் புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சமுதாயத்திற்கு வளம் சேர்ப்பது. அதன் பிரதி பலனாக கிடைக்கும் செல்வத்தில் நல்லா வாழ வேணும். .
மக்கள் எதிர்பாப்பிற்கு கல்வித்திட்டத்தில் வழி இருக்கா?
ஏதோ சில பேருக்கு வளாமான ஒரு வேலை கிடைக்கலாம். ஆனால் அதற்கும், கல்வித்திட்டம் தராத பல தகுதிகளையும் பெற்றிருக்க வேண்டும்.
பெரிய எதிர்பார்ப்புகளுடன் கல்வித்திட்டத்தில் காலை வைத்த ஏழைகளில் பலர் உள்ள சிறிய உடமைகளாய்யும் இழந்து வருவது ஒரு தொடர்கதை..
கல்வித் தகுதி வெள்ளைக்காலர் உத்தியோகத்திற்கு தேவையான பல தகுதிகளில் ஒன்று, அவசியமானதும் கூட.அது மட்டுமே போதாது, இல்லையா?
அடுத்த்தாக கல்வி பெறுவதில் மாணவர்களுக்கு உள்ள சிக்கல்கள் என்ன்?
கல்வி அளிப்பதில் ஆசிரியர்களுக்குள்ள் தடங்கல்கள் என்ன என்ன?.
1. நினைவாற்றல், இதற்கு பால பருவத்திலிருந்து தொடர்ந்து பயிற்சி அவசியம்.
2. கற்பிப்பதற்கு பயிற்சிகள் உள்ளன. ஆனால் கற்பதற்கு யாரும் இதுவரை பயிற்சிகள் தருவது எப்படி என்று சிந்திக்கவில்லை (என்னைத் தவிர??)..
கற்பது சிந்திப்பதில் உள்ள பல பரிமாணங்களை அறிந்து, பயிற்சி செய்வது.
3. இயற்க்கையாக, எல்லா உயிர்களுக்கும், சிந்திக்கும் திறன் வெவ்வேறு அளவுகளில் உள்ளன. முக்கியமாக அதிக உயிர்களுக்கு மிகவும் குறைவான (வெவ்வேறு அளவுகளில்) சிந்திக்கும் திறன் இயற்கையாக அமைந்திருக்கிறது. (அதே போல சிறிய் அளவிலான மக்களுக்கு , வெவ்வேறு அளவுகளில், சிந்திக்கும் திறன் அமைந்துள்ளது.
4. கல்வித்திட்டத்தில் அறிவதை (கற்பதை) அதிகரிக்க பயிற்சிகளை அளிக்க வேண்டும். (அது மிகச் சுலபம்தான்).
அறிவடைந்தவர்கள் எப்படி நலன் பெறுவார்கள்?
1, வாழ்க்கையின்னு பாத்தா, பிரச்சினைகள் நம்மை எப்பவும் தொடரும். அப்ப முடிவுகள் எடுக்க அறிவு தேவை.
தவறான முடிவுகள், பிரச்சனைகளை அதிகரிக்கச் செய்யும்.
எந்த பிரச்சனையைத் தீர்க்கவேண்டுமானாலும் சரி, எந்த புதிய முடிவு எடுக்கரத்துக்கு முன்னாலேயும் சரி, மொதல்லே, வழக்காமான் நம்ப்பிகைகளை தள்ளி வச்சுட்டு (எல்லாம் படைச்சவன் பாத்துப்பான், சாமிக்கி மஞசத்துமியிலே காசு முடிஞ்சு வச்சிருக்கேன்), அறிவால வழி தேடனும். அதுக்கு கல்வித்திட்டம் வழி வகை எல்லாம் சொல்லணும்.
படிச்சா வேலை கிடைக்கல்லேன்னா என்ன காரண்ம்.?
- நம்ம நாட்டுலே பெரும்பாலான மக்கள் விவசாய்த்தை நம்பித்தான் வாழராங்க. அதனாலே வேற தொழிலெல்லாம் கம்மி.
- ஜனத்தொகை வேற அதிகம்.
- வெள்ளைக்காலர் உத்தியோகம் ஒரு அளவுதான் இருக்கு.
- அப்படிப்பட்ட ஒரு வேலைக்கு பத்து பேர் போட்டி. அதுனால உள்ளதுக்கு உள்ளே திறமைகளை வளத்துக்கிட்டவன்
- ஆசதான் துன்பத்துக்கு காரணமுன்னு புத்தர் சொன்னாரு. அவரு கிடக்காரு. ஏழ்மை இல்லாமே வாழணு முன்னு ஆசப்படரது தவறு இல்லீங்க.
- இல்லாததுக்கு ஆசப்படல்லியே . சமுதாய்த்துலே இருக்கரதுலே ஒண்ணுதானே, நாமகேக்குறொம்.
- ஆனா, வேல தேடி அலையுர ஆளுங்க் தான் நிறைய. ஆயிட்டங்க. அதுனால நிரைய போட்டி இருக்கு.வேறீ தொழில் செய்ய பற்சியும் இல்லே, படிச்ச படிப்புலே தொழில் செய்ய வழி வகையும் இல்லே.
- ஆசப்படரவங்க, மேலும் தகுதிய் வளத்துக்கலாம்.
- டியூஷன், டிரெயினிங் என்று வரப்போ,அப்படி - இப்புடின்னு காச கரியாக்காம, இது நமக்கு தேவையான அறிவு தறுமான்னு சுத்தமா தெரிஞ்சுக்கணும்.
- மொத்ததுலெ, வேலை கிடைக்கிறதுக்கு மட்டுமில்லாம, நல்லா வாழ்ணுமுன்னா உண்மையான அறிவை வளக்க ஆசப்படனும்.
அறிவை எப்படியெல்லாம் வளக்கலாமுன்னு தெரிஞ்சுக்கணுமா?.
அத்ப்பத்தி ரொம்ப வருஷம் ஆராய்ச்சி பண்ணி சிம்பிளா ஒரு புத்தகம் தயாராகுதுங்க.
http://science-of-good-living.blogspot.com/
http://science-of-spirituality.blogspot.com/
http://sprituality-is-knowledge.blogspot.com/
N Natarajan
natarajan.naga@gmail.com